சூப்பர் ஸ்டாரின் "அண்ணாத்த" பட டீஸர்
#TamilCinema
Prasu
3 years ago

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
விஸ்வாசம் படத்திற்கு பின் இயக்குநர் சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இப்படத்தை இயக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் ‘அண்ணாத்த’ முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை அடைந்த நிலையில் இப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலும் கடந்த அக் 4ஆம் தேதி வெளியாகி பெரிதும் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.
"அண்ணாத்த" பட டீஸர் இதோ



